பாலம் இடிந்து போக்குவரத்துக்கு இடையூறு.

எம்பிலிப்பிட்டியவில் இருந்து தொரகொலயா ஊடாக மித்தெனிய செல்லும் பிரதான வீதியில் அமைந்துள்ள ஹுலந்தாவ பாலம் இன்று (05) அதிகாலை இடிந்து வீழ்ந்துள்ளது.
பாலம் இடிந்து விழுந்தபோது மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று பாலத்தின் வழியாக சென்று கொண்டிருந்தது.
இந்த விபத்தில் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை எனவும், மாற்று வழிகளை பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்