கார் விபத்தில், தாய் இறந்தார், சிறுமி, தந்தை மருத்துவமனையில்…

ஹொரணை, பாணந்துறை வீதியின் குல்பான பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மூன்று வயது மகள் ஆகியோர் பயணித்த லங்காம பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளானதாக ஹொரண தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பண்டாரகம, ரைகம கொஸ்வத்தபர பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான ஆர்.ஏ.தனுஜா பிரியதர்ஷனி (வயது 40) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.
பெற்றோர்கள் இருவரும் தமது ஒரே மகளின் தேவைக்காக காரில் ஹொரண நகருக்கு வந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.