இலங்கையின் அபிவிருத்திக்கு முழு உதவிகள்! – செந்திலிடம் இந்தியத் தூதுவர் உறுதி.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா வை, கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்தியத் தூதரகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் அபிவிருத்திக்குத் தேவையான உதவிகள் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளன.
இதன்போது இலங்கையின் அபிவிருத்திக்கு முழுமையான உதவிகள் வழங்கப்படும் என்று இந்தியத் தூதுவர் உறுதியளித்துள்ளார்