ஐஸ் போதைப்பொருள் பாவித்த யாழ். பல்கலை மாணவன் கைது.
ஐஸ் போதைப்பொருள் பாவித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை பொலிஸார் தாக்கினர் எனவும், அடி தாங்க முடியாமல் தப்பியோடி வந்த மாணவன் உயிரைக் காப்பாற்றுமாறு கோரி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்தார் எனவும் நேற்று செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், இன்று காலை மேற்படி மாணவனைக் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரால் உத்தரவிடப்பட்டது.
அந்த மாணவன் ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியமை யாழ். போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது.
மாணவனின் உடலில் பொலிஸார் தாக்கியதற்கான தடயங்களும் இல்லை எனவும் வைத்தியசாலைத் தகவல்கள் கூறுகின்றன.
வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் என்ற மாணவன் நேற்றுக் காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியப் பணிமனையில் முறைப்பாடு செய்த பின்னர் பொலிஸாருக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல்… கர்நாடகாவில் பலி எண்ணிக்கை 2ஆக உயர்வு..!
சாந்தன் நாடு திரும்புவதற்கு எந்தவித தடையும் இல்லை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு.
இலங்கைக்குக் கடத்த முயன்ற 7 இலட்சம் போதை மாத்திரைகளுடன் ஒருவர் இந்தியாவில் கைது!
கொழும்பில் போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது!
மோட்டார் சைக்கிள் மோதி இருவர் பரிதாப உயிரிழப்பு – 9 மாதக் குழந்தை படுகாயம்.
தமிழ்க் கட்சிகளின் தலைவர்களை விரைவில் சந்திக்கின்றார் மோடி!
சிம்லாவில் நிலச்சரிவு, 2 பேர் பலி!
அரசு பேருந்துகளில் இனி திருநங்கைகள் இலவசமாக பயணிக்கலாம்: டெல்லி முதலமைச்சர்
முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.