பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாது என கெஹலிய தெரிவித்துள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை இன்று (07) புதிய பாராளுமன்ற அமர்வின் ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அனுமதித்துள்ளார்.
இதன்படி, கெஹலிய ரம்புக்வெல்லவை பாராளுமன்றத்திற்கு அழைத்து வருமாறு சார்ஜன்ட் குஷான் ஜயரத்ன சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கெஹலிய ரம்புக்வெல்ல இன்று (07) பாராளுமன்ற அமர்வில் பங்கேற்க விரும்பவில்லை என சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
மனித இம்யூனோகுளோபிலின் தரமற்ற ஊசிகளை கொள்வனவு செய்தமை தொடர்பில் கடந்த 2ஆம் திகதி பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் அப்போதைய முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல கைது செய்யப்பட்டு மாளிகாகந்த நீதவான் திருமதி லோச்சனா அபேவிக்ரமவினால் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார். .