தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது

சென்னையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் விஜய் கடந்த 2ஆம் தேதி தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். வரும் 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை, இத்தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்துள்ள விஜய், 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான் இலக்கு என அறிவித்தார். விஜயின் இந்த அறிவிப்பால் அவருடைய ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர். இந்த நிலையில் தமிழக வெற்றி கழக கட்சியின் முதல் செயற்குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது.
தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த கூட்டத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தல்தான் இலக்கு என்ற நிலையில், அதற்கு இப்போது முதலே படிப்படியாக ஆயத்தமாவது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது.
மேலதிக செய்திகள்
கெஹலிய ராஜினாமா : ஜனாதிபதியின் கீழ் சுற்றுச்சூழல் அமைச்சகம்
அனுர திஸாநாயக்க உள்ளிட்டோர், இந்திய புத்திஜீவிகளை சந்தித்தனர்
பெலியத்த ஐவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது.
பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாது என கெஹலிய தெரிவித்துள்ளார்.