சிகாகோவில் இந்திய மாணவர் மீது கொலைவெறித் தாக்குதல்: 10 நாளில் மூவர் மர்ம சாவு!
அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் இந்திய மாணவர் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் மூன்று இந்திய மாணவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த சையத் மசாஹிர் அலி என்ற மாணவர், அமெரிக்காவின் வெஸ்லியான் பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 4-ஆம் தேதி அடையாளம் தெரியாத 4 பேர் சையத் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தற்போது மருத்துவமனையில் அவர் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சில காணொலிகளை பகிர்ந்து எக்ஸ் தளத்தில் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சையத் மற்றும் அவரின் மனைவியை தொடர்பு கொண்டு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாக அமெரிக்காவில் பயிலும் இந்திய மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் கவலையடைய வைத்துள்ளது.
கடந்த வாரம் ஒஹியோ மாகாணத்தில் பயிலும் இந்திய மாணவர் ஷ்ரேயாஸ் ரெட்டியும், ஜனவரி 30-ஆம் தேதி இண்டியானா மாகாணத்தில் நீல் ஆச்சாரியா என்ற மாணவரும் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தனர்.
அதற்கு முன்னதாக அமெரிக்காவில் ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் பயின்ற விகேக் சைனி என்ற மாணவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவமும் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலதிக செய்திகள்
கெஹலிய ராஜினாமா : ஜனாதிபதியின் கீழ் சுற்றுச்சூழல் அமைச்சகம்
அனுர திஸாநாயக்க உள்ளிட்டோர், இந்திய புத்திஜீவிகளை சந்தித்தனர்
பெலியத்த ஐவர் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபர் கைது.
பாராளுமன்றத்திற்கு செல்ல முடியாது என கெஹலிய தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றி கழகத்தின் முதல் செயற்குழு கூட்டம் இன்று கூடுகிறது