மன்னன் சார்லஸ் புற்றுநோய்க்கு உள்ளானதை அறிந்ததும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக கூறியுள்ள இங்கிலாந்து பிரதமர்.

பிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக் நேற்று (06ஆம் திகதி) பிபிசி செய்திக்கு வழங்கிய விசேட அறிக்கையில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் புற்றுநோய் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டதாக தாம் நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.
மன்னன் சார்லஸ் புற்றுநோய்க்கு உள்ளானதை அறிந்ததும் அதிர்ச்சியும் வருத்தமும் அடைந்ததாக கூறியுள்ள இங்கிலாந்து பிரதமர், அவர் மிக விரைவில் குணமடைவார் என நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.