முன்னாள் கடற்படைத் தளபதி தயா சண்டகிரி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

முன்னாள் கடற்படைத் தளபதியாகவும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியாகவும் கடமையாற்றிய தயா சண்டகிரி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.அவரது பரந்த அறிவு மற்றும் அனுபவத்தின் காரணமாக அவரை கடல் மற்றும் கடற்படைக் கொள்கைகள் தொடர்பான ஆலோசகராக நியமிக்க எதிர்க்கட்சித் தலைவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.