ஹமாஸின் போர்நிறுத்த முன்மொழிவுகளை நெதன்யாகு நிராகரித்தார்.
காஸா பகுதியில் இடம்பெற்று வரும் யுத்த மோதல் வெற்றிக்கு கொண்டு செல்லப்படும் எனவும், இன்னும் சில மாதங்களில் அது நிகழும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலின் உடன்படிக்கையுடன் அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் இணைந்து திட்டமிட்டுள்ள காஸா போர்நிறுத்தப் பிரேரணைக்கு ஹமாஸ் முன்வைத்த நிபந்தனைகளை நிராகரித்து இஸ்ரேல் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முழு வெற்றியைத் தவிர வேறு தீர்வு இல்லை என்றும், காஸாவில் ஹமாஸ் நீடித்தால், இஸ்ரேலின் அடுத்த இனப்படுகொலைக்கு அது இழுக்கப்படும் என்றும் நெதன்யாகு கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
ஹமாஸின் நிபந்தனைகளின் பேரில் இஸ்ரேல் பிரதமர் போர்நிறுத்தப் பிரேரணையை நிராகரித்த போதிலும், எகிப்து தனது முயற்சிகளை கைவிடப் போவதில்லை என்று கூறியுள்ளதுடன், இந்த உடன்படிக்கைக்கு உடன்படுவதற்கு இரு தரப்பும் நெகிழ்வாக இருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.