நெல்லூர் அருகே 2 லாரிகள்,பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் பலி
ஆந்திரம் மாநிலம், நெல்லூர் மாவட்டம் முசுனூர் அருகே 2 லாரிகள், சுற்றுலா பேருந்து மீது நேருக்கு நேர் மோதிய கோர விபத்தில் 6 பேர் பலியாகினர்,20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஆந்திரம் மாநிலம், நெல்லூர் மாவட்டம் முசுனூர் சுங்கச்சாவடி அருகே சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தி நோக்கி எருதுகளை ஏற்றிக்கொண்டு ஒரு லாரியும், பின்னால் இரும்பு ஏற்றிச் சென்ற மற்றுமொரு லாரியும் சென்று கொண்டிருந்தது.
இந்த நிலையில், இரும்பு ஏற்றிச் சென்ற லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்திசையில் வந்த தனியார் சுற்றுலாப் பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் சுற்றுலாப் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர், மேலும் 2 பேர் நெல்லூர் அரசு மருத்துவமனையில் இறந்தனர். மற்றும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்குள்ளான சுற்றுலாப் பேருந்து சென்னை வடபழனியில் இருந்து ஹைதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தது என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலதிக செய்திகள்
10 ஆயிரம் வீட்டுத் திட்டம் பெப்ரவரி 19இல் ஆரம்பம் – ஏப்ரலில் காணி உரிமை என்கிறார் அமைச்சர் ஜீவன்.
யாழ். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறத் தகுதியானவர்கள் விபரம் இணையத்தில் வெளியீடு.
யாழில் பஸ்ஸில் பெண்களைச் சீண்டிய இருவர் கைது!
இடதுசாரி ஆட்சி நடைபெறும் கேரளாவுக்கும் அநுர விஜயம்.
கேரள கஞ்சா, மதுவுடன் மூவர் வசமாகச் சிக்கினர்!
அரச நிதி பற்றிய குழுவின் தலைவராக மீண்டும் ஹர்ஷ டி சில்வா நியமனம்!
அநுரவின் கட்சி ரணில் அரசுக்கு ஆதரவு வழங்கும்! – ஐ.தே.க. நம்பிக்கை.