நீர்கொழும்பிலும் ஒருவர் சுட்டுக்கொலை!

நீர்கொழும்பு – கல்கந்த பகுதியில் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் 60 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.