வெற்றியை தேடும் பணியில் புதிய முயற்சி.. சைதை துரைசாமி டி.என்.ஏ-வை கேட்கும் காவல்துறை!
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி அமைப்பை நடத்தி வருபவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. திரைப்பட இயக்குநரான வெற்றி துரைசாமி தனது அடுத்த அடுத்த படத்தின், படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு கடந்த பிப். 4ஆம் தேதியன்று இவர்கள் சென்ற கார் கஷாங் நுல்லா மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சட்லெஜ் ஆற்றில் விழுந்தது. விபத்து குறித்து தகவலறிந்த சென்ற மீட்புப் படையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத்தை மீட்டனர். வெற்றி துரைசாமியும், உள்ளூரை சேர்ந்த கார் ஓட்டுநர் தன்ஜினும் காணாமல் போயினர். பின்னர் தன்ஜினின் சடலம் மீட்கப்பட்டது.
தேசிய மீட்பு படையினரும் தேடுதல் பணியின் போது ஆற்றில் கவிழ்ந்த காரில் வெற்றியின் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, ஆற்றங்கரையோரம் உள்ள பாறையில் மனித மூளையின் திசுக்கள் கண்டெடுக்கப்பட்டு அம்மாநில தடயவியல் மையத்திற்கு டிஎன்ஏ ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் பணி ஒரு வாரம் நீண்ட நிலையில், விபத்து நடந்தபோது வெற்றி துரைசாமி ஆற்றில் விழுந்ததைப் போல, ஒரு பொம்மையை மாதிரியாக வைத்து அதன் போக்கை காவல்துறையினர் கண்காணித்து வருகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பாக இமாச்சல் காவல்துறை சார்பில் தமிழ்நாடு காவல்துறை கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், காணாமல் போன வெற்றியின் டிஎன்ஏ-வை உறுதிப்படுத்த அவரது தந்தை சைதை துரைசாமியின் டிஎன்ஏ மாதிரியை அனுப்பி வைக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகனின் தேடுதல் பணி தொடரும் நிலையில், சைதை துரைசாமி இமாச்சலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகள்