வடமராட்சியில் வீதியில் நெல் பரவிக் கொண்டிருந்தவர் மோட்டார் சைக்கிள் மோதி பலி!

யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதியில் வீதியில் நெல்லைப் பரவிக் கொண்டிருந்த நபர் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழந்துள்ளார்.
வடமராட்சியையும் தென்மராட்சியையும் இணைக்கும் கச்சாய் – புலோலி வீதியில் மாக்கிராய் பகுதியில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றது.
வீதியில் நெல்லைப் பரவிக் கொண்டிருந்தவர் மீது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.