அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து தெரிவான 2 புத்துருவாக்கப் படைப்புக்கள் கௌரவிப்பு
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து தெரிவான இரண்டு புத்துருவாக்கப்படைப்புக்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.
சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினமான 17.09.2020 ஐ முன்னிட்டு வைத்தியசாலைகளுக்கிடையே நாடளாவிய ரீதியில் இலங்கை சுகாதார அமைச்சின்
சுகாதாரப்பராமரிப்பு தரம் மற்றும் பாதுகாப்பு செயலகத்தினால்
நடாத்தப்பட்ட “கொரோனா நோயினுடைய தொற்று அதி தீவிரமடைந்திருந்த காலபகுப்தியில் வைத்தியசாலைகளினால் மேற்கொள்ளப்பட்ட
பாதுகாப்புக்கான புத்துருவாக்கங்கள் ” எனும் தலைப்பில் பல கட்டங்களைக் கொண்ட தான போட்டியில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையானது தன்னகத்தே உருவாக்கப்பட்டிருந்த பல புதிய உருவாக்கங்களில் பின்வரும் 4 உருவாக்களை சமர்ப்பித்திருந்து குறிப்பிடத்தக்கது.
1. MPM Booth – நகரக்கூடிய பாதுகாப்பு சிகிச்சை கூடு
2. ABH 39 முகக் கவசம் (face mask)
3. Tripple triage system
4. Hand Washing and Separate PathWay System
இவற்றுள் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனும் நோக்கில் ஒரு வைத்தியசாலையிலிருந்து ஆகக்கூடிய தெரிவாக இரண்டு புத்துருவாக்கப் படைப்புக்களுக்கே சந்தர்ப்பம் வழங்கப்படும் எனும் தொனிப்பொருளிலான முதற்கட்ட வரிசைப்படுத்தலில் முதல்
20 இடங்களுக்குள் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின்
1. MPM Booth – நகரக்கூடிய பாதுகாப்பு சிகிச்சை கூடு
2. ABH 39 முகக் கவசம் (face mask)
என்பன தெரிவானது.
இரண்டாம் கட்டமாக இவற்றிலிருந்து 10 புத்துருவாக்கப் படைப்புக்களை மட்டும் தெரிவு செய்யும் வரிசைப்படுத்தலில் ஒரு வைத்தியசாலையில் இருந்து ஏதாவது ஒரு புத்துருவாக்கப்படைப்பு மட்டுமே தெரிவு செய்யப்படும் என்ற நிபந்தனைக்கு அமைய அக்கரைப்பற்று ஆதார வைத்திய சாலை MPM Booth முதல் 10 இற்குள் முதலாவதாக தெரிவாகி கடந்த 17.09.2020 ஆம் திகதியன்று கொழும்பு சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு செயலகத்தில் மாண்புமிகு சுகாதார அமைச்சர் (திருமதி) பவித்திராதேவி வன்னிஆராச்சி, சுகாதார செயலாளர் மற்றும் சுகாதார அமைச்சின்
DG, DDGs மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் நடாத்தப்பட்ட “சர்வதேச நோயாளர் பாதுகாப்பிற்கான தின”
விழாவில் விளக்கக் காட்சி (presentation) செய்தலுக்காக முதலாவதாக அழைக்கப்பட்டு முதற்கட்ட 20 இற்கான தெரிவிலும் மற்று இறுதிக்கட்ட 10 இற்கான தெரிவிலும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலிருந்து தெரிவான இரண்டு புத்துருவாக்கப்படைப்புக்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டது.