காமினி ஜயவிக்ரம பெரேராவின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி.

கடுகம்பலையில் அமைந்துள்ள காமினி ஜயவிக்ரம பெரேராவின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி, முன்னாள் அமைச்சரின் நலன் விசாரித்துச் சிறு உரையாடலில் ஈடுபட்டார்.
குடும்ப உறுப்பினர்களிடம் தகவல்களை கேட்டறிந்த ஜனாதிபதி, திரு.காமினி ஜயவிக்ரம பெரேராவின் இல்லத்திற்கு அருகில் கூடியிருந்த பிரதேச மக்களுடன் சிநேகபூர்வமாக உரையாடினார்.
இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், திரு.காமினி ஜயவிக்ரம பெரேராவின் புதல்வர்கள், வடமேல் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் திரு.அசங்க ஜயவிக்ரம, குருநாகல் மாவட்ட அரசியல்வாதிகள், பதில் பொலிஸ் மா அதிபர் திரு.தேஸ்பந்து தென்னகோன் ஆகியோர் கலந்துகொண்டனர்.