முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஸ் தாஸ்க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது முதலமைச்சரின் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் கடந்த ஜூன் 16 ஆம் தேதி முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு 3 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.20,500 அபராதமும் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
சிறை தண்டனையை எதிர்த்து முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கடந்த ஜூலை மாதம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
பலமுறை வாதாட கால அவகாசம் அளித்தும் தொடர்ந்து வாதாட மறுத்து வந்த நிலையில், நீதிமன்ற எச்சரிக்கைக்கு பின்னர் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் 5 நாட்கள் வாதாடி தனது வாதத்தை நிறைவு செய்தார்.
அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் கடந்த 9 ஆம் தேதி இறுதி வாதத்தை முன் வைத்தார். கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த 9 ஆம் தேதியோடு நிறைவடைந்தது.
இந்த நிலையில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாசிற்கு கீழமை நீதிமன்றம் அளித்த 3 ஆண்டு சிறை தண்டனையை உறுதி செய்து விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா தீர்ப்பு வழங்கினார். ராஜேஷ் தாஸின் மேல்முறையீட்டு மனுவையும் தள்ளுபடி செய்தார். முன்னாள் செங்கல்பட்டு எஸ்பி கண்ணனுக்கு விதிக்கப்பட்ட ரூ.500 அபராதத்தையும் நீதிமன்றம் உறுதி செய்தது.
மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸிற்கு 30 நாட்கள் கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
நாடு திரும்பினார் ஜனாதிபதி ரணில்!
ரயில் மோதி 14 வயது சிறுவன் சாவு! – தம்பலகாமத்தில் துயரம்.
பலாங்கொடை பிரபல தமிழ்ப் பாடசாலையின் உயர்தர மாணவி சடலமாக மீட்பு!
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்குகளால் ஜனாதிபதியை நியமிப்பதற்கு ரணில் முயற்சி.
நாளை முதல் அமுலுக்கு வர இருக்கின்ற தொடர்பாடல் சட்ட திட்டங்கள்.
பாகிஸ்தான் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கடையொன்றில் துப்பாக்கிச் சூடு பெண் ஒருவர் காயம்.
காமினி ஜயவிக்ரம பெரேராவின் இல்லத்திற்குச் சென்ற ஜனாதிபதி.
இரண்டாவது போட்டியிலும் இலங்கை வெற்றி பெற்றது.
விவசாயிகளின் பாதையில் ஆணி அடிக்கும் பாஜக அரசு: ராகுல் காந்தி காட்டம்
ஜம்மு-காஷ்மீரில் மூன்று சகோதரிகள் தீயில் கருகி பலி!
தமிழ்நாடு அரசின் உரையை புறக்கணித்த ஆளுநர் ஆர்.என்.ரவி – சட்டப்பேரவையில் பரபரப்பு!