அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோவிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
கடந்த 2015ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். அப்போது, அபுதாபியில் 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நாராயண் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டினார். இந்தக் கோயில் ராஜஸ்தான் இளஞ்சிவப்பு மணற்கல் மற்றும் இத்தாலி வெள்ளை மார்பிள் கற்களால் வடிவமைக்கப்பட்டது. இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 900 கோடி ரூபாய் மதிப்பில் மொத்தம் 7 கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவை, நிலநடுக்கம், மற்றும் அதிக வெப்பத்தால் பாதிக்காத வகையில் அதிநவீன தொழில்நுட்பம் பயன்பத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த கோயில் பாப்ஸ் அமைப்பு சார்பில் கட்டப்பட்டுள்ளது
இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி, இன்று ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார்.
இந்த பயணத்தின் போது அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலான சுவாமி நாராயண் கோயிலை நாளை திறந்து வைக்கிறார்.மேலும், இந்த பயணத்தின் போது ஐக்கிய அரபு அமீரக இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானையும் சந்திக்கவுள்ளார்.
மேலதிக செய்திகள்
வெற்றி துரைசாமியின் உடல் இன்று மாலை அடக்கம்!