2024 இல் ஜனாதிபதித் தேர்தல்; 2025 இல் நாடாளுமன்றத் தேர்தல் – வெளியானது உத்தியோகபூர்வ அறிவிப்பு.
ஜனாதிபதித் தேர்தல் இவ்வருடம் உரிய காலத்துக்குள் நடத்தப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று அறிவித்துள்ளது.
அத்துடன், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும், இதற்கான நிதி 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தேர்தல்களை நடத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவைச் சார்ந்துள்ளது என்றும், தேவையான சந்தர்ப்பங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவுடன் அரசு இணைந்து செயற்படும் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இவ்வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் (தற்போதைய ஜனாதிபதி) ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் சஜித் பிரேமதாஸவும், தேசிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடவுள்ளனர் என்று அக்கட்சிகள் அறிவித்துள்ளன. ஆனால், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னமும் தீர்மானம் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
more news
காலி வீதியில் வாகனம் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்தது.
நாட்டையே அதிர வைத்த அட்டாலுகம சிறுமியின் கொலையாளிக்கு தண்டனை வழங்கப்படவுள்ளது.
இந்தியா-ஈரான் வர்த்தகம் 190 மில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
மியான்மரில் இளைஞர்களுக்கு ராணுவ சேவை கட்டாயம்.
பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
மட்டக்களப்பில் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு.
ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் ஐ.தே.கவில் இணைவு!
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட இந்து கோவிலை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி