மட்டக்களப்பில் மின் வேலியில் சிக்கி உயிரிழந்த இருவரின் சடலங்கள் மீட்பு.

மட்டக்களப்பு – வாழைச்சேனை, ஈச்சையடி பகுதியிலுள்ள பண்ணை ஒன்றில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி உயிரிழந்தனர் எனக் கூறப்படும் இருவரின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குடும்பிமலை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரும், அவரது மருமகனான புலிபாய்ந்த கல்லைச் சேர்ந்த 21 வயதுடைய நபரும் இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவருக்குச் சொந்தமான குறித்த பண்ணையை வாழைச்சேனையைச் சேர்ந்த நபர் ஒருவர் குத்தகை அடிப்படையில் நிர்வகித்து வருகின்றார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.