மியான்மரில் இளைஞர்களுக்கு ராணுவ சேவை கட்டாயம்.
18-35 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கும் 18-27 வயதுக்குட்பட்ட இளம் பெண்களுக்கும் மியான்மர் இராணுவ அரசாங்கம் இரண்டு வருட கட்டாய இராணுவ சேவையை விதித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 45 வயதுக்குட்பட்ட மருத்துவர்கள் போன்ற விசேட நிபுணர்களுக்கு 3 வருட இராணுவ சேவை கட்டாயம் எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியன்மார் நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டத்தின் படி இராணுவ சேவையை 5 வருடங்கள் வரை நீடிக்க முடியும் என மியன்மார் இராணுவ அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.