இந்தியா-ஈரான் வர்த்தகம் 190 மில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் 191 மில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளதாக தெஹ்ரான் டைம்ஸ் தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியில் 158 மில்லியன் டாலர் பரிமாற்றத்துடன் ஒப்பிடுகையில் இது குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் 21% அதிகரித்துள்ளதாக தெஹ்ரான் செய்தி நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
ஈரானின் சபஹார் துறைமுகம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான முக்கிய மையமாக மாறியுள்ளது என்று இந்தியாவுக்கான ஈரான் தூதர் இராஜ் எலாஹி சமீபத்தில் கூறினார். ஈரான் புரட்சியின் 45வது ஆண்டு நிறைவையொட்டி, புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் தூதர், இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார உறவுகள் கணிசமாக வளர்ந்து வருவதாக மேலும் தெரிவித்தார்.