ஆன்லைன் பாதுகாப்பு சட்டம் குடிமக்களின் கருத்து சுதந்திரத்தை மீறுகிறது: ரணிலிடம் சமந்தா பவர் கருத்து!
இணையவழி பாதுகாப்புச் சட்டம் பிரஜைகளின் கருத்துச் சுதந்திரத்தை மீறுவதாக ஏற்கனவே பல தரப்பினர் கவலை வெளியிட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கவனம் செலுத்துமாறு USAID நிர்வாகி திருமதி சமந்தா பவர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று ஜனாதிபதிக்கும் திருமதி சமந்தா பவருக்கும் இடையே ஜூம் விவாதம் ஒன்று நடந்தது. அங்கு, உத்தேச இணையவழி பாதுகாப்புச் சட்டம் , கருத்துச் சுதந்திரம் மற்றும் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என தெரிவித்த திருமதி சமந்தா பவர், அது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்க ஆவலாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இலங்கையின் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள், ஜனநாயகம் மற்றும் சட்டமியற்றும் செயற்பாடுகள் தொடர்பில் திருமதி சமந்தா பவர் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், பொருளாதாரப் படுகுழியில் இருந்து மீள்வதற்கான இலங்கையின் முயற்சிகளில் ஜனாதிபதியுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நிறுவனம் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் இருக்கும் என திருமதி சமந்தா பவர் அப்போது தெரிவித்துள்ளார்.
More News
ஆன்லைன் சட்டத்தில் 30 திருத்தங்கள்..
துப்பாக்கி வெடித்து குடும்பஸ்தர் மரணம்! – முல்லைத்தீவில் துயரம்.
கடந்த வருடம் மாத்திரம் யாழ். போதனாவில் 47 குழந்தைகள் மரணம்!
தமிழ் மக்களுடன் கனடா இணைந்து பயணிக்கும்! – சிறீதரனிடம் தூதுவர் உறுதி.
பேருவளை துறைமுகத்தில் படகு காவலாளி கடலில் விழுந்து உயிரிழந்தார்.
இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்த நெதர்லாந்து நீதிமன்றத்தின் உத்தரவு.