இம்ரானுக்கு எதிராக 6 கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க திட்டம்.
பாகிஸ்தானில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக பாகிஸ்தான் முஸ்லிம் லீக்கின் நவாஸ் கட்சி, பில்வால் பூட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 6 கட்சிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இம்ரான்கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் பிரதிநிதிகளின் குற்றச்சாட்டை நிராகரித்து, எதிர்காலத்தில் ஆறு கட்சிகளின் கூட்டு அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி பதவியைப் பெறுவதற்கான நிபந்தனையின் கீழ் நவாஸ் ஷெரீப்பின் கட்சியில் சேர பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி விருப்பம் தெரிவித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவரது மகன் பில்வால் பூட்டோ, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் பதவியை ஏற்கப் போவதில்லை என தீர்மானித்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தின் பிரதமராக நவாஸ் ஷெரீப் அல்லது அவரது சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் நியமிக்கப்படுவார்கள் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஆறு கட்சிகள் இணைந்து தீர்மானித்த போதிலும், அந்த பிரதிநிதிகளுக்கான பாராளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை 152 எனவும், தேர்தலில் வெற்றி பெற்ற இம்ரானின் பல பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 169 ஆசனங்களை பூர்த்தி செய்யுமாறும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.