கனமழை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு.

பனியுடன் கூடிய கனமழை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் பல நெடுஞ்சாலைகள், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகவும், துபாய் அரசாங்க ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து அரசு பள்ளிகளிலும் கல்வி நடவடிக்கைகளை ஆன்லைன் முறையில் மேற்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளதாகவும், இந்த திடீர் வானிலை மாற்றம் நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனமழையால் துபாய் மட்டுமின்றி தலைநகர் அபுதாபி, ராசல் கைமா, புஜைரா உள்ளிட்ட நகரங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக கலீஜ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.