பத்து வயது சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டுக் கொலை! – மன்னாரில் கொடூரம்.

பத்து வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொடூர சம்பவம் மன்னார், தலைமன்னார் கிராமத்தில் நேற்று இரவு நடைபெற்றுள்ளது.
தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றைப் பராமறிப்பதற்காகப் பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே மேற்படி சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
அந்த நபர் மற்றும் அவரது மனைவி தலைமன்னார் பகுதியில் வசித்து வந்த நிலையில் கணவன் போதைக்கு அடிமையான நிலையில் மனைவி பிரிந்து சென்றுள்ளார்.
இந்தநிலையில் அருகில் இருக்கும் பெண் ஒருவர் சந்தேகநபருக்கு உணவு வழங்கி வந்த நிலையில், அவர்களுடன் சந்தேகநபர் நட்பாகப் பழகி வந்துள்ளார்.
சந்தேகநபர் நேற்று மாலை உணவு வழங்கும் பெண்ணின் பேத்தியான மேற்படி சிறுமியைக் கடைக்கு அழைத்துச் சென்ற நிலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அருகில் இருந்த சி.சி.ரி.வி. கமராக்களின் உதவியுடனும், ஊர் மக்களின் உதவியுடனும் மேற்கோண்ட தேடுதலின்போது சிறுமியின் சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தள்ளி வைக்க முடியாது – செந்தில் பாலாஜிக்கு அதிர்ச்சி கொடுத்த நீதிமன்றம்
மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 2 பேர் பலி, 25 பேர் காயம்
மலையக மக்களுக்காகவும் எனது குரல் ஓங்கி ஒலிக்கும் – ஜீவனிடம் சிறீதரன் உறுதி.
அலிபூரி தொழிற்சாலை தீ விபத்தில் 11 பேர் பலி: உரிமையாளர் மீது கொலை வழக்குப் பதிவு
மு.க.அழகரி உட்பட 17 பேர் விடுவிப்பு – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
பதவி மோகத்தில் தமிழரசைச் சிதைக்கச் சிலர் சதி முயற்சி! – சம்பந்தன் காட்டம்.
தெற்கு காசா பகுதியில் உள்ள முக்கிய மருத்துவமனை இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்……….
இஸ்ரேலில் இருந்து லெபனானுக்கு ஏவுகணை தாக்குதல்.
கனமழை காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ளப்பெருக்கு.