டொனால்ட் டிரம்ப் 354 மில்லியன் டாலர் செலுத்த நீதிமன்றம் உத்தரவு.
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் 354 மில்லியன் டாலர் செலுத்த வேண்டும் என நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவில் மோசடி வழக்கு தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் அபராதம் செலுத்துமாறு நியூயார்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நியூயார்க்கில் கார்ப்பரேட் அதிகாரியாகவோ அல்லது இயக்குநராகவோ 3 ஆண்டுகள் வரை பணியாற்றவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சொத்துக்கள் மற்றும் வணிகங்களின் நிகர மதிப்பை கடன் பெறுவதற்காக மோசடி செய்ததாகக் கூறி அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் தோல்வியடைந்த டொனால்ட் டிரம்ப், 354 மில்லியன் டாலர்கள் மற்றும் 9 பத்தில் அபராதம் செலுத்த வேண்டும் என நியூயார்க் நீதிமன்ற நீதிபதி “ஆர்தர் என்கோரோன்” உத்தரவிட்டுள்ளார்.
அவர் நியூயார்க்கில் மூன்று ஆண்டுகள் வரை வர்த்தகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவரது ரியல் எஸ்டேட் தொழிலை கட்டுப்படுத்தும் நிறுவனங்களை கலைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.