அயோத்தியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்!
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்ம பூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீ பாலராமா் சிலை கடந்த மாதம் 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட்டது. பிரதமா் மோடி பங்கேற்ற கோலாகல பிரதிஷ்டை நிகழ்வைத் தொடா்ந்து, ராமா் கோயிலில் பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.
நாள்தோறும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பக்தா்கள் ராமா் கோயில் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.
ராமா் கோயிலின் தரிசனம் நேரம் மாற்றியமைக்கப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாள்தோறும் பிற்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை ஒரு மணி நேரம் கோயில் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், அயோத்தி ராம ஜென்ம பூமி கோயிலில் பாலராமரை தரிசிக்க வரும் பக்தர்கள் வழக்கத்தைவிட அதிகமாக குவிந்துள்ளனர்.
மேலதிக செய்திகள்
நவல்னியின் மரணத்திற்கு புடின் தான் காரணம் – பிடன் கூறுகிறார்.
மாலைதீவின் வெளிநாட்டு கடன் நெருக்கடி குறித்து ஐஎம்எஃப் எச்சரித்துள்ளது.
டொனால்ட் டிரம்ப் 354 மில்லியன் டாலர் செலுத்த நீதிமன்றம் உத்தரவு.
முதலாவது T20 யில் இலங்கை அணி 04 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
மனித – மிருக மோதலை தடுக்க வலியுறுத்தி வயநாட்டில் முழு அடைப்பு போராட்டம்