அமலாக்கத்துறை சம்மனை 6-வது முறையாக நிராகரித்த கேஜரிவால்!
தில்லி கலால் கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன் காரணமாக தில்லி முன்னாள் துணை முதல்வரும் கலால் துறை அமைச்சருமான மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் கலால் கொள்கை முறைகேட்டில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகையால், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அவருக்கு ஏற்கெனவே ஐந்து முறை சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அந்த சம்மனை நிராகரித்த கேஜரிவால் அரசியல் உள்நோக்கத்துடன் தனக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக குற்றம் சாட்டி நேரில் ஆஜராகவில்லை.
தொடர்ந்து, அரவிந்த் கேஜரிவாலுக்கு ஆறாவது முறையாக இன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு கேஜரிவால் இன்றும் ஆஜராகவில்லை.
தில்லி சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் பிப்ரவரி 15-ம் தேதி தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை நடைபெறும் என்று கேஜரிவால் தரப்பு வழக்குரைஞர் தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மார்ச் 16-ம் தேதி அடுத்த விசாரணை தேதியில் அவர் நேரடியாக நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக செய்திகள்
மீகொட பெண் ஊழியரை சுட்டு, கொள்ளையடித்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், ரஃபா பகுதியில் பாரிய தாக்குதல் நடத்தப்படும் என்கிறது இஸ்ரேல்!