கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000: தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகம்
புதுமைப்பெண் திட்டத்தைப் போல, தமிழ்ப் புதல்வன் எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2023-24ஆம் நிதியாண்டுக்கான தமிழக நிதிநிலை அறிக்கை இன்று தமிழக பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருக்கும் பல முக்கிய திட்டங்களில், தமிழ்ப் புதல்வன் திட்டம் முக்கியமானதாகும்.
அதாவது, உயர்கல்வியில் பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதுமைப்பெண் திட்டத்தைப் போல, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்க தமிழ்ப் புதல்வன் என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
இதன் கீழ் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயிர்கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் மற்றும் இதழ்களை வாங்கி கல்வியை மேருகேற்றிட உதவும் வகையில் மாதந்தோறும் ரூ.1000 அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.
இந்த திட்டத்தின் மூலம் சுமார் மூன்று லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவர். இதற்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று அறிவித்துள்ளார்.
மேலதிக செய்திகள்
மீகொட பெண் ஊழியரை சுட்டு, கொள்ளையடித்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!
பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், ரஃபா பகுதியில் பாரிய தாக்குதல் நடத்தப்படும் என்கிறது இஸ்ரேல்!