நவம்பர் 18 ஆம் திகதிக்கு பின்னர் அரசாங்கம் சட்டப்பூர்வமாக செல்லாததாகிவிடும் : ஜீ.எல்.
ஜனாதிபதித் தேர்தலை செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கும் இடையில் நடத்த வேண்டும் எனவும், நவம்பர் 17ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இன்று (19) கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
ஜனாதிபதித் தேர்தலை இவ்வருடம் ஜூலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் தொடக்கத்தில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிக்கும் எனவும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்படாவிட்டால், நவம்பர் 18ஆம் திகதிக்கு பின்னர் தற்போதுள்ள அரசாங்கம் சட்டரீதியற்ற அரசாகிவிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை இல்லாதொழிப்பதற்கு பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கை எடுத்துக்கொள்வது சாத்தியமில்லை என தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டுமா என்றும் , இந்த அரசாங்கம் இன்னும் ஒரு வருடத்திற்கு நீடிக்க வேண்டுமா என்றும் பொதுமக்களிடம் நேரடியாக கேட்க வேண்டும் என பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது குறித்து அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது. அது ஜனாதிபதி செயலகம் அல்ல என்றும், சர்வசன வாக்கெடுப்பு முடிவு குறித்து கேள்வி கேட்க எந்தவொரு குடிமகனுக்கும் உரிமை உண்டு என்றும் பேராசிரியர் தெரிவித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவது என்பது இலகுவான செயற்பாடல்ல எனவும், அது அரசியலமைப்புடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளதால், நாட்டின் அடிப்படை அரசியலமைப்பை திருத்துவதற்கு முன்னர் மக்களின் கருத்தை பிரதிபலிக்கும் பாராளுமன்றம் ஒன்று இருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களை உள்வாங்குவதற்கான கடிதங்கள் குறித்து கல்வி அமைச்சின் அறிவிப்பு.
2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை இன்று ஆரம்பம்.
கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,000: தமிழ்ப் புதல்வன் திட்டம் அறிமுகம்
ரணில் , நினைப்பது போல் தந்திரமானவர் இல்லை – அனுர.
பணயக்கைதிகளை விடுவிக்காவிட்டால், ரஃபா பகுதியில் பாரிய தாக்குதல் நடத்தப்படும் என்கிறது இஸ்ரேல்!
மீகொட பெண் ஊழியரை சுட்டு, கொள்ளையடித்த சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி!