பிரிட்டிஷ் கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்.
ஹூதி கிளர்ச்சியாளர்களின் செய்தித் தொடர்பாளர் X சமூக ஊடக வலையமைப்பில், பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டதாகவும், கப்பல் தற்போது மூழ்கும் அபாயத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார். இதனால் கப்பலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், கப்பலை கைவிட்டதால் ஊழியர்கள் எவ்வித பாதிப்பும் இன்றி தப்பியதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செங்கடலில் ஏடன் வளைகுடாவைச் சுற்றியுள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது, மேலும் யேமனின் செங்கடல் கடற்கரையிலிருந்து 35 கடல் மைல் தொலைவில் தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டிஷ் கடல் மற்றும் வர்த்தக நடவடிக்கை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அறிக்கை ஒன்றில் கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதிலும், குறித்த கப்பல் பிரித்தானியாவிற்கு சொந்தமானதா என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.