வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அதிரடி அறிவிப்புகள்
2024- 25ம் நிதியாண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்.
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்” என்ற திருக்குறளுடன் வேளான் பட்ஜெட்டை உரையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கினார். தொடர்ந்து, “2020-2021ஆம் ஆண்டில் 152 லட்சம் ஏக்கராக இருந்த வேளாண் சாகுபடி பரப்பு, 155 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது. 2022-23ஆம் ஆண்டில் உணவு தானிய உற்பத்தி 116 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் நிறைவேற்றப்படாமல் இருந்த பாசன மின் இணைப்பிற்கான விண்ணப்பங்களில், 1.50 லட்சம் மின் இணைப்புகள் 2 ஆண்டுகளில் வழங்கப்பட்டுள்ளன.” என தெரிவித்தார்.
மேலும், “நடப்பாண்டிலும் 50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு 45 லட்சம் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. வேளாண் பணிகளுக்கான ஊதியம் தற்போது அதிகமாக உள்ளது. வேளாண் பணிகளுக்கு தேவையான அனைத்து வகையான வேளாண் இயந்திரங்களும், கருவிகளும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்பட்டு வருகின்றன. கலைஞர் வேளாண் திட்டம் 7,075 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க, வேளாண் பொருட்களை தமிழ்நாடு அரசே கொள்முதல் செய்கிறது.” எனவும் கூறினார்.
“2 லட்சம் விவசாயிகளுக்கு திரவ உயிர் உரங்கள் வழங்க ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு 5 லட்சம் லிட்டர் திரவ உயிர் உரங்கள் வழங்கப்படும். ஆடாதொடா, நொச்சி போன்ற தாவரங்களை தரிசு நிலங்களில் பயிரிட ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 10,000 விவசாயிகளுக்கு தலா 2 மண்புழு உரப்படுக்கைகள் வழங்கிட ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” எனவும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
“மண்ணின் வளத்தை மேம்படுத்திட பயிர் கழிவுகள் உள்ளிட்ட கரிமப் பொருட்களை வேகமாகச் சிதைத்து கரிமச்சத்தின் அளவை உயர்த்தவும், கிடைக்காத நிலைவையிலுள்ள சத்துகள் கிடைக்கப் பெறவும், பயனுள்ள நுண்ணுயிர்க் கலவையை உருவாக்கிட ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அதன் செயல்திறன் மதிப்பிடப்படும். உழவர் சந்தைகளில் விற்பனை செய்வதைப் போன்று தரமான வேளாண் விளைபொருட்கள், மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்கள் எளிதில் நகர்ப்புர நுகர்வோரைச் சென்றடைய, நிர்ணயிக்கப்பட்ட தர அளவுகளின்படி விவசாயிகளிடமிருந்து நேரடியாகக் கொள்முதல் செய்து, தரம்பிரித்து, சிப்பம்கட்டி, முத்திரையிட்டு விற்பனை செய்ய ஏதுவாக 100 உழவர் அங்காடிகள், 5 கோடி ரூபாய் மாநில நிதியில் செயல்படுத்தப்படும்” எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலதிக செய்திகள்
காஸா நாசர் மருத்துவமனைக்குள் புகுந்த இஸ்ரேலியப் படைகள்.
இந்திய பெரிய வெங்காயம் மீண்டும் இலங்கைக்கு……….
இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
பிரிட்டிஷ் கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்.
இஸ்ரேலுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததற்கு ஈரான் கண்டனம்.