விஜய்யின் அடுத்தடுத்த அதிரடி அரசியல் நகர்வுகள்.. புதிய பொறுப்பாளர்களை நியமிக்க திட்டம்!
கடந்த 4 ஆம் தேதி டெல்லியில் இந்திய தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் தலைமையிலான கட்சியின் பெயரை விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பதிவு செய்தார். அதன்படி “தமிழக வெற்றி கழகம்” என கட்சியின் பெயரை அறிவிப்பு வெளியானது.
இதைத் தொடர்ந்து அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், 2026 சட்டப்பேரவை தேர்தல் தான் இலக்கு என தெரிவித்தார். அத்துடன், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என அறிவித்தார்.. தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதும் கட்சியின் கொடி, சின்னம் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்களை நியமிக்க கட்சியின் தலைவர் விஜய் திட்டமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாவட்டத்திற்கு ஒரு பொறுப்பாளர் அல்லது, 2,3 தொகுதிகளுக்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், மாவட்ட நிர்வாகிகளை தனித்தனியாக சந்தித்தித்து மாவட்ட பொறுப்பு மற்றும் பதவிகள் குறித்து கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
மேலதிக செய்திகள்
காஸா நாசர் மருத்துவமனைக்குள் புகுந்த இஸ்ரேலியப் படைகள்.
இந்திய பெரிய வெங்காயம் மீண்டும் இலங்கைக்கு……….
இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 72 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
பிரிட்டிஷ் கப்பல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்.
இஸ்ரேலுக்கான ராணுவ உதவிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததற்கு ஈரான் கண்டனம்.