குளவி தாக்குதலுக்கு இலக்கான 76 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பசறை பொது விளையாட்டரங்கில் இன்று (20) இடம்பெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான உள்ளக விளையாட்டு நிகழ்வின் போது குளவி கொட்டியதில் 76 மாணவர்கள் பசறை ஆரம்ப பாடசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வைத்திய அதிகாரி டொக்டர் சானக கன்கந்த தெரிவித்துள்ளார்.
இங்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 76 மாணவர்களில் 50 பேர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாகவும் மேலும் 26 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மைதானத்திற்கு கீழே உள்ள காட்டுப்பகுதியில் உள்ள தேனீ கூட்டின் மீது மாணவர்கள் குழுவொன்று கற்களை வீசி தாக்குதல் நடத்தியதன் காரணமாக மாணவர்கள் தாக்கப்பட்டதாக பசறை பொலிஸ் நிலைய பிரதான பொலிஸ் பரிசோதகர் பியரத்ன ஏகநாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ளவுள்ளனர்.