யாழ்.காரைநகர் படகு முற்றத்தில் இருந்து வெள்ளோட்டம் விட்ட Eco80 கப்பல்
இலங்கையின் தொழிநுட்ப தொழில்முனைவோரின் எல்லையற்ற ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான Eco80 பாரிய பயணிகள் படகை , அறிமுகப்படுத்தி இன்று காலை யாழ்.காரைநகர் படகு முற்றத்தில் இருந்து செலுத்தி வெள்ளோட்டம் விட்டது .
80 அடி நீளமும், 30 அடி அகலமும், சுமார் 40 டன் எடையும் கொண்ட இந்தக் கப்பலில் ஒரே நேரத்தில் 200 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும். முழுமையாக குளிரூட்டப்பட்ட மற்றும் சுகாதார வசதிகளுடன் தயாரிக்கப்படும் பிரதான அறை, வாடிக்கையாளர் ஆர்டர் தேவைகளுக்கு ஏற்ப உணவகம் அல்லது SPA வசதிகளுடன் மாற்றியமைக்கலாம்.
Below Deck Cabin 4Nos, Pantry, M/F Toilets, Skipper Cabin, Storage, Varandaவுடன் அனைத்து மின் தேவைகளும் 48 சோலார் பேனல்கள் கொண்ட ஒரு பரந்த ஆற்றல் அமைப்பால் பூர்த்தி செய்யப்படுவதால் விதிவிலக்கான சுற்றுச்சூழல் மதிப்பு கொண்டது.
தெற்காசியாவில் வேகமான பொருளாதார வளர்ச்சியைக் கொண்ட பங்களாதேஷின் சுற்றுலாத் துறை தொடர்பான தேவைக்காக Mahasen Marine இந்த கப்பலை 06 மாத குறுகிய காலத்திற்குள் வடிவமைத்து தயாரித்துள்ளது.
உள்ளூர் பொருளாதார நெருக்கடிக்கு சிறந்த தீர்வாக இந்த உற்பத்தித் திட்டத்தைத் தொடர்வது மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
நாளுக்கு நாள் வளர்ச்சியடைந்து வரும் சுற்றுலாத்துறையின் பன்முகத்தன்மை மற்றும் நவீனமயமாக்கலுக்கு இந்த அறிமுகம் மிகவும் முக்கியமானது என Mahasen Marine நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி அவந்த அதபத்து சுட்டிக்காட்டுகிறார்.
மேலதிக தகவல்களுக்கு :
Dr. Awantha Atapattu
CEO of Mahasen Marine Private Limited
+94711692567
awantha@gensopower.com
www.mahasenmarine.com