தில்லி நோக்கி ஜேசிபியுடன் புறப்பட்ட விவசாயிகள்: ஹரியாணா எல்லையில் கைது!
தில்லியை முற்றுகையிட மீண்டும் புறப்பட்ட விவசாயிகள் ஹரியாணா எல்லையில் கைது செய்யப்பட்டனர்.
வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளித்தல், பயிா்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தில்லி நோக்கி பேரணியை முன்னெடுத்தனா்.
பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், அங்கேயே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
முன்னதாக, விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சா்கள் 4-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையை ஞாயிற்றுக்கிழமை நடத்தினா்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் தில்லியை முற்றுகையிட விவசாயிகள் புறப்படுவார்கள் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
மேலும், சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை தகர்ப்பதற்காக ஜேசிபி போன்ற இயந்திரங்களுடன் 14,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் படையெடுத்துள்ளனர்.
இதற்கிடையே, சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகளை தடுத்து நிறுத்தவும் பஞ்சாப் காவல்துறைக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.
தில்லி நோக்கி சென்ற நூற்றுக்கணக்கான விவசாயிகளை ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், ஹரியாணா எல்லையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலதிக செய்திகள்
தேஷபந்து தென்னகோனின் பதவிக்காலம் முடிய 10 நாட்கள் : டிரான் மற்றும் தேஷபந்துவுக்கு கொலை மிரட்டல்!
பாகிஸ்தான் தேர்தல் , களவாடப்படும் வெற்றி! (Video)
நெருங்கும் நாடாளுமன்ற தேர்தல்: பாஜகவில் இணையும் முக்கிய புள்ளிகள் – அண்ணாமலை தகவல்!
‘த்ரிஷா அம்மா’: மன்னிப்பு கேட்டார் அதிமுக முன்னாள் நிர்வாகி!