ராகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ராகம அலப்பிட்டிவல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
இன்று காலை இனந்தெரியாத இருவர் ராகம மஹாபா அலப்பிட்டிவல பகுதியில் உள்ள கடை ஒன்றில் நபர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.
அந்த துப்பாக்கிச் சூட்டில் சுஜித் ஹெட்டியாராச்சி என்ற நபர் உயிரிழந்தார்.
இவர் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் என தெரியவந்துள்ளது