கர்ப்பிணித் தாய்மார்கள் வடக்கில் அதிகரிப்பு : யாழ் போதனா வைத்தியசாலை.
யாழ்ப்பாணத்தில் 2023ஆம் ஆண்டு 18 வயதுக்குட்பட்ட 91 சிறுமிகள் பிரசவித்துள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் கல்விப் பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த வருடத்தில் யாழ்.போதனா வைத்தியசாலையின் மகப்பேறு சிகிச்சை நிலையங்களுக்கு 119 கர்ப்பிணிகள் வந்ததாகவும், ஆனால் அவர்களில் 91 பேர் மாத்திரமே யாழ்.போதனா வைத்தியசாலையில் பிரசவித்துள்ளதாகவும் அந்தத் தகவலில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எஞ்சிய கர்ப்பிணித் தாய்மார்கள் வடக்கிலுள்ள வேறு வைத்தியசாலைகளிலோ அல்லது வேறு பிரதேசங்களிலோ சென்று குழந்தைகளை பெற்றிருக்கலாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கல்விப் பணியகம் நம்புகிறது.
எவ்வாறாயினும், யுத்தம் நிறைவடைந்து சமாதானம் நிலைநாட்டப்பட்டதன் பின்னர், வடமாகாணத்தில் வருடாந்தம் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன என அந்த நிறுவன அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
பாடசாலை செல்லும் வயதுடைய பெண்கள் மிக இளம் வயதிலேயே காதல் உறவுகளால் கல்வியை சீர்குலைத்து மிக இளம் வயதிலேயே திருமணம் செய்துகொள்வதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் கல்விப் பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் அதிபர் நியமன ஆர்ப்பட்டமும் அதன் பின்னால் மறைந்துள்ள நுண்ணரசியலும்….
யாழில் திடீரென மயங்கி விழுந்த ஆசிரியர் மரணம்!
பாரிய எழுச்சி பெறுகின்றது அநுரவின் தேசிய மக்கள் சக்தி! – பொன்சேகா சுட்டிக்காட்டு.
ராகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையின் சிவப்பு அரிசி பிரதான உணவாகும்.
இலங்கை – ஆப்கானிஸ்தான் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் இலங்கை அணியில் சில மாற்றங்கள்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜனாதிபதியை சந்தித்தார்.
திருமணத்துக்காக ‘ஸ்மைல் டிசைன்’ அறுவை சிகிச்சை: மணமகன் உயிரிழப்பு!