தலதா மாளிகைக்குக் குண்டு வைத்தவர்கள் நாட்டை எப்படி மீளக் கட்டியெழுப்புவார்கள்?
ஜே.வி.பியை மறைமுகமாகத் தாக்கிப் பேசிய சஜித் நல்லாட்சி உருவாக வேண்டும் என்றும் வலியுறுத்து தலதா மாளிகை மீது குண்டு வைத்தவர்களால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற பிக்குகள் ஆலோசனை பேரவையின் மாவட்ட மாநாட்டில் உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“பௌத்த மதத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு ஏனைய மதங்களுக்கும் பொருத்தமான இடம் வழங்கப்பட வேண்டும் என அரசமைப்பில் கூறப்பட்டுள்ள போதிலும், மிஹிந்தலை புனித பூமியில் அமைந்துள்ள மிஹிந்தலை ரஜ மகா விகாரையின் மின்சாரம் கூட துண்டிக்கப்பட்டுள்ளது.பௌத்த பிக்குகள் மேற்கொள்ளும் சமய சேவைகள் உட்பட ஏனைய சேவைகளையும் சூட்சமமாக நிறுத்த அரச கட்டமைப்பு செயற்பட்டு வருகின்றது. அந்த அரச கட்டமைப்பு மதப் பணிகளை ஒவ்வொன்றாக நிறுத்தி வருகின்றது.
தலதா மாளிகை மீது குண்டு வைத்தவர்களால் நாட்டை மீளக் கட்டியெழுப்ப முடியாது. இந்த வன்முறைகள் சமூகத்திலிருந்து முற்றாக ஒழிக்கப்பட்டு நல்லாட்சி உருவாக்கப்பட வேண்டும். குடும்ப வாதத்தை இல்லாதொழித்து நாட்டைக் கட்டியெழுப்பக் கூடிய அரசு உருவாக்கப்பட வேண்டும்.
பிரிவினைவாத பயங்கரவாதத்தைத் தோற்கடித்த பின்னர், அம்மரியாதை, கௌரவம் முப்படைகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால், அந்த மரியாதையையும் கௌரவத்தையும் ஒரு சில குடும்பங்கள் எடுத்துக் கொண்டன. அவ்வாறு எடுத்துக் கொண்டு, நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து, நாட்டில் பொருளாதாரப் பயங்கரவாதத்தைச் செயற்படுத்தி நாட்டையே அழித்தார்கள். இதன் காரணமாக 90 பில்லியன் டொலர் மதிப்பிலான கடனில் நாடு மூழ்கியுள்ளது. இதன் காரணமாக தலா ஒருவர் 12 இலட்சம் ரூபா கடனில் இருக்கின்றார்கள்.
இவ்வருட தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து இந்தப் பொருளாதாரப் பயங்கரவாதிகளை விரட்டியடித்து நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய உண்மையான அரசை உருவாக்க முன்வர வேண்டும்.” – என்றார்.
பொதுவேட்பாளராக ரணிலை களமிறக்க விசுவாசிகள் வியூகம் – அனைத்துக் கட்சிகளுக்கும் வலைவீச்சு.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி அரச அதிபர்களின் சேவை நீடிப்பு அமைச்சரவையால் நிராகரிப்பு!
இலங்கையில் என்றுமில்லாதவாறு களமிறங்கும் அரசியல் கூட்டணிகள் மும்முனைப் போட்டி பலமாக இருக்கும்.
13 இற்கு முடிவு கட்டாமல் ஜனாதிபதி முறைமையில் கைவைக்கவே கூடாதாம்! – சு.க. கூறுகின்றது.
கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு 19 வயது இளைஞர் கொலை!
யாழ். சிறையில் இருந்த 3 இந்திய மீனவர்களும் வெலிக்கடைச் சிறைக்கு.
தேர்தலை எப்படி நிறுத்தலாம்? இப்படி யோசிக்கின்றது அரசு – டலஸ் பகிரங்கக் குற்றச்சாட்டு.
சந்திரிகா – மைத்திரி இணைவு இழுபறியில்!
ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபரில் நிச்சயம் – நீதி அமைச்சர் அறிவிப்பு