காசா போர்நிறுத்த தீர்மானத்தை நான்காவது முறையாக அமெரிக்க வீட்டோ தோற்கடித்தது.
நான்காவது முறையாக தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய அமெரிக்கா, பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் போர்நிறுத்தம் செய்வதற்கான ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் வரைவை நிராகரித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு உலகின் பல நாடுகள் அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேற்று நடைபெற்ற 15 நாடுகளை உள்ளடக்கிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அல்ஜீரியாவினால் உருவாக்கப்பட்ட போர்நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவாக 13 நாடுகள் வாக்களித்ததாகவும், அந்த கூட்டத்தில் பிரித்தானியா பங்கேற்கவில்லை எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர்நிறுத்த தீர்மானத்தை ஆதரிப்பது பாலஸ்தீன மக்களின் வாழ்வுரிமையை ஆதரிப்பதாகவும், அதற்கு எதிராக வாக்களிப்பது காசா பகுதியில் நடக்கும் வன்முறைகளை அங்கீகரிப்பதாகவும் ஐ.நாவுக்கான நைஜீரியா தூதர் அமர் பெஞ்சமா தெரிவித்துள்ளார்.