காதலர் தினத்தன்று மனைவிக்குப் பரிசளிக்க 29 பவுண் நகைகளைத் திருடிய கணவர் கைது!

காதலர் தினத்தன்று தனது மனைவிக்குப் பரிசளிப்பதற்காக 29 பவுண் நகைகளைத் திருடிய சம்பவத்துடன் தொடர்புடைய கணவர் உள்ளிட்ட இருவர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டனர்.
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 25 வயதான ஆணும், ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 49 வயதான பெண்ணுமே காங்கேசன்துறை பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
காதலர் தினத்தன்று வல்வெட்டித்துறை பகுதியில் முதியவர்கள் உள்ள வீட்டினுள் 29 பவுண் நகைகள் திருடப்பட்டன. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், யாழ்ப்பாணம் நகரில் நேற்று 4 பவுண் நகைகளை அடகு வைக்கச் சென்றபோது பெண்மணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து பிரதான சந்தேகநபர் 25 பவுண் தாலியுடன் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக நடவடிக்கைக்காக வல்வெட்டித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர்கள் காலவரையற்ற போராட்டம்!