IMF சீர்திருத்தங்கள் சரியாக செய்யப்படாவிட்டால் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகள்.
சர்வதேச நாணய நிதியத்துடனான விரிவான கடன் வசதி வேலைத்திட்டம் தொடரப்பட்டு எதிர்பார்த்த பொருளாதார கட்டமைப்பு சீர்திருத்தங்கள் முறையாக மேற்கொள்ளப்படாவிட்டால், நாட்டின் பொருளாதாரம் பாதகமாக பாதிக்கப்படலாம் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின்படி, ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் நாணயக் கொள்கை அறிக்கை வெளியிடப்பட வேண்டும்.
இதன்படி, இலங்கை மத்திய வங்கி 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கான முதலாவது நாணயக் கொள்கை அறிக்கையை 2024 பெப்ரவரி 21 ஆம் திகதி வெளியிடுகிறது.
இந்தக் கொள்கை அறிக்கையானது தற்போதைய பணவீக்க விகிதத்தை ஐந்து சதவீதத்திற்கு மேல் உள்ளதாக தெரிவித்தாலும், இலங்கை மத்திய வங்கியானது நடுத்தர காலப்பகுதியில் சராசரி பணவீக்க வீதத்தை ஐந்து சதவீதமாக பேண இலக்கு வைத்துள்ளது.