புளொட் அமைப்பின் முக்கியஸ்தர் ஆர். ஆர். அவர்களின் இறுதிக் கிரியைகள், வவுனியா கோவில் குளத்தில்…..

புளொட் அமைப்பின் சிரேஷ்ட உப தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் செயலாளருமான ஆர்.ஆர். என அழைக்கப்படும் வேலாயுதம் நல்லநாதர் (இராகவன்) நேற்று காலமானார்.
புளொட் அமைப்பின் மூத்த போராளியான ஆர். ஆர். 1980 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை தனது வாழ்வின் பெரும் பகுதியை தமிழ் மக்களின் விடுதலைக்கான பயணத்தில் அர்ப்பணித்தவராவார்.
வேலாயுதம் நல்லநாதர் (இராகவன், ஆர்.ஆர்) அவர்களின் இறுதிக் கிரியைகள், வவுனியா கோவில் குளத்தில் அமைந்துள்ள
PLOTE கட்சியின்
ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மாவட்டத் தலைமையகத்தில், நாளைமறுதினம் (25.02.2024) அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்று,
நல்லடக்க நிகழ்வும் நடைபெறும்.