தனது வருங்கால கணவருடன் நடிகை சித்ரா எடுத்த புகைப்படம் : கண்ணு வைக்கும் ரசிகர்கள்! அம்புட்டு அழகு

பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் நடிகை சித்ரா தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிரம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஜோடியை வாழ்த்துவதுடன், எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
நடிகை சித்ரா தொகுப்பாளினி, நடிகை, நடனம், மாடலிங் என பல திறமைகளைக் கொண்டவர்.
ஆனால், இவருக்கு மிகப்பெரிய பேரும் புகழும் ஏற்படுத்தி கொடுத்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான். தற்போது இவருக்கென்று தனி ஆர்மி எல்லாம் கூட துவங்கிவிட்டது.
இந்நிலையில் நிச்சயதார்த்தற்கு பின்னர் சித்ரா முதன் முறையாக தனது வருங்கால கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.