யாழில் அழுகிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம், உரும்பிராய் பகுதியில் அழுகிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இந்தச் சடலம் நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சின்னத்துரை ஜெகதீஸ்வரி என்ற 66 வயதுடைய பெண்ணே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அவரது இறப்புக்கான காரணம் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
இந்நிலையில், மரண விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி ந.பிறேமகுமார் மேற்கொண்டார்.