இந்திய மாடல் அழகி தற்கொலை பின்னணியில் இளம் இந்திய கிரிக்கெட் வீரர்?விசாரணையில் இறங்கிய போலீசார்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) ஆல்ரவுண்டரான 23 வயது அபிஷேக் ஷர்மாவின், நண்பியும் , 28 வயது மாடலுமான தானியா சிங், சூரத் பகுதியில் உள்ள தனது பிளாட்டில் கடந்த திங்கட்கிழமை (19) தற்கொலை செய்து கொண்டு இறந்து கிடந்தார்.
தானியா சிங் , தற்கொலை குறித்து விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகள் அவரது செல்போனை சோதனை செய்தபோது, அபிஷேக் சர்மாவுக்கும், தானியா சிங்குக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தமை தெரியவந்துள்ளது. அவர்களது தொடர்பு சச்சரவாக மாறியமையை வெளிப்படுத்தும் பல வாட்ஸ்அப் செய்திகளையும் புலனாய்வாளர்கள் கவனித்துள்ளனர்.
போலீஸ் அதிகாரிகள் , விசாரணைக்காக அபிஷேக் சர்மாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தானியா சிங்கின் தொலைபேசியின் அழைப்பு விவரப் பதிவு (CDR) மற்றும் IP விவரப் பதிவு (IPDR) தரவுகளையும் , அதிகாரிகள் அலசி வருவதாகக் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையில் அந்த மாடல் தானியா சிங் , சர்மாவுக்கு வாட்ஸ்அப் சாட் மூலம் மெசேஜ் அனுப்பியதாகவும், ஆனால் சர்மா அதற்கு பதிலளிக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வேசு பொலிஸ் நிலையத்திலும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி நேரத்தில் ஒப்பந்த கொலை செய்த , செங்கலடி இராணுவ முகாம் கோப்ரல் கைது
திடீரெனப் பற்றி எரிந்தது வீடு வயோதிபப் பெண் உடல் கருகிச் சாவு!
கைத்தொலைபேசி திருடி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் சிக்கினார்.