பணி நேரத்தில் ஒப்பந்த கொலை செய்த , செங்கலடி இராணுவ முகாம் கோப்ரல் கைது
வெல்லே சாரங்கவின் மைத்துனரை, மஹாபாகே பகுதியில் வைத்துக் கொன்ற கொலையாளி, செங்கலடி இராணுவ முகாம் கோப்ரல் : பணி நேரத்தில் இருந்தபோதே கொலையை செய்துள்ளார் : சந்தேக நபர் கைது!
கடந்த புதன்கிழமை (21) காலை மஹாபாகே அலப்பிட்டிவளைச் சந்திக்கு அருகில் வைத்து , பாதாள குழுவின் வெல்லே சாரங்கவின் மைத்துனரான ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினர் நடத்திய விசாரணையில் , கடமையிலிருந்த செங்கலடி இராணுவ முகாம் கோப்ரல் ஒருவர் , சேவை நேரத்தில் , ரயிலில் ராகமைக்கு வந்து கொலையை நடத்திவிட்டு , மீண்டும் முகாமிற்கு திரும்பிச் சென்று அறிக்கை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அனைத்துத் தகவல்களும் வெளியானதை அடுத்து, பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இராணுவ கோப்ரலை கைது செய்யச் சென்ற போது, மட்டக்களப்பு செங்கலடி முகாமில் இருந்து கோப்ரல் தப்பிச் சென்றிருந்த நிலையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் , சற்று முன்னர் அம்பாறை பிரதேசத்தில் வைத்து அவரைக் கைது செய்துள்ளனர்.
மஹபாகே பகுதி கொலை சம்பவத்தில் , 2 முன்னாள் ராணுவ வீரர்களும், சேவை நேரத்தில் இருந்த ஒரு இராணுவ வீரரும் பங்கு கொண்டுள்ளனர். கைதான கொலையாளி செங்கலடி இராணுவ முகாமின் நான்காவது கமுனு ஹேவா படையணியில் கடமையாற்றும் ஒரு கோப்ரல் ஆவார்.
நிபுண என்ற பாதாள குழுவின் திட்டமிடலில் , இந்தக் கொலை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதற்குத் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரான இராணுவத்தின் கெமுனு சேவா படைப்பிரிவில் இருந்து தப்பிச் சென்ற சிப்பாய் ஒருவர் ஏற்கனவே விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திடீரெனப் பற்றி எரிந்தது வீடு வயோதிபப் பெண் உடல் கருகிச் சாவு!
கைத்தொலைபேசி திருடி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் சிக்கினார்.
சாந்தன் இலங்கை வருவதற்கு இந்திய மத்திய அரசு அனுமதி.
இந்திய மாடல் அழகி தற்கொலை பின்னணியில் இளம் இந்திய கிரிக்கெட் வீரர்?விசாரணையில் இறங்கிய போலீசார்!