“நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” ஐக்கிய குடியரசு முன்னணியின் முன்மொழிவு ஜனாதிபதியிடம்! – இன்று கையளித்தார் சம்பிக்க.
ஐக்கிய குடியரசு முன்னணியின் “நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று முற்பகல் கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்றது.
ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழுவினர், ஜனாதிபதியைச் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், குறித்த முன்மொழிவை ஜனாதிபதியிடம் கையளித்தனர்.
இந்த நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும் காலநிலை மாற்றம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான ருவன் விஜேவர்தன, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார ஆகியோரும், ஐக்கிய குடியரசு முன்னணியின் சார்பில் கரு பரணவிதான, நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க, சட்டத்தரணி ஷிரால் லக்திலக ஆகியோரும் கலந்துகொண்டனர்.