தென்மராட்சியில் யுவதியின் சடலம் மீட்பு!

யாழ்., தென்மராட்சியில் 18 வயதான யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாவகச்சேரி – டச்சு வீதியிலுள்ள வீட்டிலிருந்து யுவதியின் சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளது.
மேற்படி யுவதி தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.